201 பேருக்கு 'கலைமாமணி விருது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2019

201 பேருக்கு 'கலைமாமணி விருது'


தமிழக அரசு சார்பில், 201 பேருக்கு, 'கலைமாமணி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், பொதுக்குழு பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை, சின்னத்திரை போன்ற கலை பிரிவுகளில் புகழ் பெற்ற, திறமைமிக்க, 201 கலைஞர்களுக்கு, 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார், பிரபுதேவா, பிரசன்னா, பாண்டியராஜன், கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமய்யா, சூரி, சிங்கமுத்து, ஸ்ரீகாந்த், சந்தானம், நடிகையர் பிரியாமணி, நளினி, சாரதா, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படஉள்ளன. விருது பெறும், ஒவ்வொரு கலைஞருக்கும், மூன்று சவரன் தங்கப் பதக்கம், சான்றிதழ்வழங்கப்படும்.புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு, 'பாரதி விருதுகள்' அறிவிக்கப்பட்டுள்ளன.

இசைப் பிரிவில், எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் சரோஜா - லலிதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு, 'எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகள்' வழங்கப்பட உள்ளன.நாட்டிய பிரிவில், வைஜயந்தி மாலா பாலி, தனஞ்செயன், சந்திரசேகர் ஆகியோருக்கு, 'பால சரஸ்வதி விருதுகள்' அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன், சான்றிதழ்வழங்கப்படும்.விரைவில் நடக்க உள்ள அரசு விழாவில், முதல்வர் பழனிசாமி விருதுகள் வழங்கிகவுரவிப்பார்.

2 comments:

  1. ஆமாம் இவர்களெல்லாம் சுதந்திரப்போராட்ட தியாகிகள்... அதனால் வழங்கப்படும் விருகளோ...வெட்டி வேலைக்கு விருதுகள், வெட்கக்கேடு...

    ReplyDelete
  2. என் நாட்டில்தான் , தேசத்தை காத்தவனுக்கு காவலாளி வேலை , கூத்தாடிகளுக்கு நாட்டை ஆளும் வேலை...ஹா ஹா ஹா...


    என்று மாறுமோ என் தேச மக்களின் மனநிலை...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி