மார்ச் 8 - மகளிர் தின கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

மார்ச் 8 - மகளிர் தின கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்


வளையல் போராளிகளுக்கு...

திலகத்தாரகைகளே
நீர் நிலமென இயற்கையாவிலும் பெயரான பூவையர்களே

உயிர்க்கரு சுமக்கிற கருவிழிகளே
கவிஞனின் ஆதர்ச பாடுபொருள்களே

கண்ணசைவில் உலகை நெம்புகிற கற்பூரங்களே
கதவோரமும் ஒன்டியே கிடக்கிற மௌனப் பூக்களே

ஆகாயம் தொடங்கி பூகோளம் வரை தடம் பதிக்கிற மெல்லினங்களே

சமநீதி கேட்டு கேட்டு சலித்தே கிடக்கிற சரித்திரங்களே
உள்ளங்கைக்குள் உலகே சுருங்கினாலும்
உடைகளில் உண்டான சமத்துவம் 
இன்னும் உள்ளங்களில் உருப்பெற வில்லையே


இணை உறவே
அடக்குமுறை கட
பார் அதிர நட
இச்சைப் பொருளாகாதே
இம்சைகளின் இருள் ஏற்காதே

சாராய நெடியோடும்
அடுப்பங்கறைப் புகையோடும் தேய்ந்திடாத முழுமதியாய் உலா வா

கண்ணீரில் கசிந்த காலங்கள் கடந்துபோக
காமத்துப்பாலாய் இன்னமும் எதிர்ப்பார்க்கும் ஈனர்களுக்கு பதிலளி உன் திமிர்ச்செருப்பால்..

நெற்றித்திலகமே
நீயின்றி ஏது இப்பூவுலகமே

உயர் உயர உயர இன்னும் உயர்

வளைக்கரங்களே உங்களுக்கென் 
வணக்கங்கள்

பெண்மை வாழ்க

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

பேரன்புடன்,
சீனி.தனஞ்செழியன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்,
வேலூர் மாவட்டம்.

8 comments:

  1. மிக்க நன்றி... ஐயா

    ReplyDelete
  2. கல்விச்செய்தி மகளிர் வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. MCA படிப்பதற்கு எதாவது ஒரு UG Degree போதும். அப்படி இருக்க PG Trb Computer science exam எழுத McA B. Ed படித்தவர்களுக்கு ஏன் அனுமதிக்க கூடாது... பாதிக்கப்பட்டவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். 8012381919

    ReplyDelete
  4. "அனைவருக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்கள்"
    ஏனெனில்,
    அனைவருக்குள்ளும் பெண்மை பண்பு இருக்கும்....

    வெவ்வேறு வழியில் வெளிப்படும்..

    இரக்கம் வழியாகவோ,அரவணைக்கும் பண்பின் மூலமாகவோ,அறம்சார்ந்தபண்பின்வழியாகவோ,தவறைமன்னித்து மறந்து ஏற்றுக்கொள்ள ளும் பண்பின் மூலமாகவோ,நேர்மையான முறையில் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தின் மூலமாகவோ
    இப்படி
    பல பண்பின் வெளிப்பாட்டில்
    அனைத்து மனிதனுக்குள்ளும் பெண்மை நிறைந்துள்ளது....

    ஏனெனில் "நாம் தாய்வழிச்சமூகம்"...

    அது சிந்துவெளி சமூகமாஇருந்தாலும் சரி,
    சங்ககாலமானாலும்சரி,
    தற்போது
    கீழடியிலும், ஆதிச்சநல்லூரிலும் வெளிபடுகிறது.....

    ஆனால்,
    வாழும் நிகழ்காலத்தில்
    சாதியப்படிநிலையில் உள்ள தாழ்வுநிலைக்கும்,
    தாழ்வான நிலையில் உள்ளதால் தான்
    இன்னும் 33% இட ஒதிக்கீடு கூட எட்டப்படவில்லை....

    ReplyDelete
  5. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Happy world women's day to all..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி