அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு! - kalviseithi

Mar 10, 2019

அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு!


அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு விதித்து,அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ள அரசாணை: சிறப்பு நிகழ்ச்சிகளான திருமணம், திருமண நாள், பிறந்த நாள் விழாக்கள், மத பண்டிகைகள்,இறுதிச் சடங்குகள் போன்ற நாட்களில், தமிழக அரசு ஊழியர்கள், உறவினர்களிடம் இருந்து, பரிசாக பெறக்கூடிய பொருட்களின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

இவ்வாறு பெறப்படும் பரிசுகள் குறித்த விபரத்தை, ஒரு மாதத்திற்குள், அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பரிசாக பெறக் கூடிய மொத்த தொகைகளின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் அல்லது, ஆறு மாத ஊதியம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகைக்குள் தான் இருக்க வேண்டும்.மேலும், அரசு ஊழியர்கள், தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து, தனிப்பட்ட முறையில் வட்டியில்லாத கடனாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம். அந்தத் தொகையை, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவோ; ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கவோ; காலிமனையில் வீடு கட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. இது சாக்கடை அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்தானே...

    ஊருக்கு மட்டும் உபதேசமா...

    ReplyDelete
    Replies
    1. அரசு போடும் சட்டம் எல்லாமே பொது மக்களுக்கு மட்டும் தான் தெரியாதா அதுவும் கஷ்டபடுற மக்களுக்கு மட்டுமே

      Delete
  2. செம.. பரிசுப் பொருட்கள் என்கிற போர்வையில் வரும் லஞ்சத்திற்கு கட்டுப்பாடு..

    ReplyDelete
  3. உங்க வீட்டில் என்ன என்ன பொருள் இருக்கு அதை முதலில் சொள்ளுங்கம்மா.....சொல்லுங்கள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி