இன்று போலியோ சொட்டு மருந்து மறவாதீர்கள்! - kalviseithi

Mar 10, 2019

இன்று போலியோ சொட்டு மருந்து மறவாதீர்கள்!


தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டுதோறும் இரண்டு தவணையாக 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

 போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தபோதிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது தொடர்ந்து வருகிறது. இருப்பினும் நிகழாண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடமாடும் சொட்டு மருந்து மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் 1,652 சிறப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மாநில முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டுவிரலில் மை வைக்கப்படும். அதன் மூலம் விடுபட்ட குழந்தைகளை அடையாளம் காண முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளில் அடுத்த வாரம் சனிக்கிழமை வரை போலியோ மருந்து வழங்கப்படும். அதேபோன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் வரும் செவ்வாய்க்கிழமை வரை சொட்டு மருந்துகள் வழங்கப்படும்.

 மேலும், வீடு தேடிச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி