வழக்கு முடிந்ததால் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி பள்ளிகளில் விரைவில் துவங்கும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2019

வழக்கு முடிந்ததால் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி பள்ளிகளில் விரைவில் துவங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில் அமைக்கப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்கப்படும்’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
   ஈரோடு மாவட்டம் கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் நேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:    கோவை குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குறிப்பிட்ட பிரிவினரை  மட்டும் சேர்ப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.  

இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலரை அனுப்பி உள்ளோம்.    உடனடியாக பள்ளி முன்பு வைக்கப்பட்ட விளம்பர பலகையை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பிளஸ் 1 வகுப்பில் முன்பு 16 பாடங்கள் மட்டுமே இருந்தது.   பள்ளிகளில் பயோ மெட்ரிக் பொருத்துவது குறித்து தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.    அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தது.   தற்போது, வழக்கு முடிந்ததால் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் துவங்கும்.

ஐசிடி என்ற புதிய திட்டத்தை சென்னை அசோக்நகரில்  4ம் தேதி  முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதன்மூலம் 6000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.    அனைத்து வகுப்புகளுக்கும் இணையதள வசதியுடன்  கணினி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. Dai unnaku Nala saavu varathu

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி