புதுக்கோட்டை அரசு உயர்துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறந்து வைத்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா
புதுக்கோட்டை ,மார்ச் 6 : புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்து மின்னணு பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தார்.
பின்னர் மின்னணு பெயர் பலகை அமைத்திட உதவி செய்த இரண்டாம் வகுப்பு மாணவி நித்யாஸ்ரீயின் பெற்றோர் தேவியை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சால்வை அணிவித்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்தாம் வகுப்பு மாணவி காயத்ரிக்கு புத்தகம்,பேனா பரிசு வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில் மாணவர்கள் கோடைகாலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதற்காக வகுப்புக்கு ஒரு மண்பாண்டங்களை வழங்கினார்கள்..
மின்னணு பெயர்ப்பலகை திறப்பு விழா குறித்து பள்ளி தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல் கூறியதாவது:எங்களது பள்ளியில் இரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவி நித்யாஸ்ரீ அவள் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவாள்..அவள் தற்பொழுது எங்களது பள்ளியில் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட பேச்சுப் பயிற்சியின் மூலம் நன்றாக பேசுகிறாள் அவள் எங்களது பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தமிழ் ,ஆங்கிலம் சரளமாக பேசினாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவளது பெற்றோர்கள் பள்ளிக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்ற நோக்கில் மின்னணு பெயர்பலகை வாங்கி வந்து கொடுத்தனர்.இந்த மின்னணு பலகையில் பள்ளி மாணவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்இடம் பெறும்.தினமும் பள்ளியில் நடைபெறும் கல்வி சார்ந்த செயல்பாடுகள் இடம் பெறும்.இந்த மின்னணு பலகையானது பொதுமக்களின் பார்வையில் இருப்பதால் சாலையில் செல்வோர் இப்பள்ளியை பற்றி வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
விழாவில் புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவி,மற்றும் ஆசிரியர்கள் அன்புக்கிளி,சுபா,ராமதிலகம்,நிர்மலா,பூபதி,வினோத், மற்றும் பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுகை செல்வா வரவேற்றுப் பேசினார்.பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி