அரசு ஊழியர் ஓய்வு வயதை குறைக்க மத்திய அரசு ஆலோசனை - kalviseithi

Mar 4, 2019

அரசு ஊழியர் ஓய்வு வயதை குறைக்க மத்திய அரசு ஆலோசனை


ஊழியர்களுக்கான ஓய்வு வயதை, 58 ஆக குறைக்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் திட்ட மிட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் மொத்த வருவாயில், 65 சதவீதம், ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், ஊழியர்களின் ஓய்வு வயதை, 60ல் இருந்து, 58 ஆக குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிதி நெருக்கடியில் உள்ளது. சமீபத்தில் போராட்டம் நடத்திய நிறுவன ஊழியர்கள், 15 சதவீத ஊதிய உயர்வு கோரினர்.எனவே, ஊழியர்களின் ஓய்வு வயதை, 58 ஆக குறைக்கவும், 56 வயதுக்கு மேற்பட்டோருக்கு, விருப்ப ஓய்வு அளிப்பது குறித்தும், நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது.இந்த ஆலோசனை செயல்வடிவம் பெற்றால், ஏராளமானோர் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை, பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சம்பளம் கிடைக்குமா?

நிதி பற்றாக்குறை காரணமாக, ஜம்மு - காஷ்மீர், கேரளா வட்டத்தை தவிர, பிற வட்டங்களில், ஊழியர்களுக்கு, பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 comments:

 1. Good ...
  Very good ...
  Apadiye m.p m.l.a age.kum limit vainga...
  Yena parliament than india.la migaperiya mudhiyor illam...

  ReplyDelete
  Replies
  1. Yes, mp, mla vukum puthiya pension thitathai amul paduthu ,

   Delete
 2. Reliance jioவை வளர்க்க பாடுபட்ட அளவிற்கு, modi bsnlக்கு பாடுபட்டு இருந்தால் உங்களுக்கு ஏன் நிதிச்சுமை வரப்போகிறது.???

  One india plan இருந்த காலகட்டத்தில் எல்லாம் bsnlஐ அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

  தனியாரை வாழ வைக்க அரசு நிறுவனங்களை செயல்படாமல் வைத்தது தான் இதற்கு காரணம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி