கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!! - kalviseithi

Mar 4, 2019

கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!!


கடந்த "01-03-2019" அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB Board) இணையதளத்தில் TRB விளம்பர எண் '19 CI'-ல் 814 கணினி பயிற்றுநர் (Computer Instructor Grade-I) பணியிடத்துக்கான அறிவிப்பு (Official Notification) வெளியானது.

✍  பெரும்பாலும், ஆசிரியர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டால் அந்த அறிவிப்பின் இறுதியிலேயே அந்த தேர்விற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Board) வெளியிடுவது வழக்கம். ஆனால், கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் அப்படி எந்தவொரு பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை என்பது பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

✍  கணினி பயிற்றுனர் Grade-I பணியிடங்களுக்கு வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பிற்கான (19 CI) பாடத்திட்டத்தை (Syllabus) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலேயே வெளியிட வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

✍  இந்த அறிவிப்பில் வரிசை எண்.7-ல் (பக்க எண்.5) "Scheme of Examination" பிரிவில் இந்த தேர்வுக்கான மதிப்பெண்களின் வகைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணினி பயிற்றுனர் தேர்வுக்கான "பாடத்திட்டம்    (Syllabus)" இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.

✍  மேலும், பக்க எண்.5-ல் கடந்த மாதம் "27-02-2019" அன்று வெளிவந்த அரசாணை எண்.10-ல் "(G.O.(2D) No.10)" School Education (SE7(1)) -- இந்த கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி கல்வித்துறையின் இந்த அரசாணையை "(G.O.(2D) No.10)" இணையத்தில் பெற முடியவில்லை.

✍  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பாடத்திட்டம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் இல்லை. இவ்வாறு குழப்பமான‌ ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

✍  தற்போது, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல ஆசிரியர் தேர்வு "பயிற்சி மையங்கள் (Coaching Centers)" கணினி ஆசிரியர்களை மூளைச்சலவை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். இதனால், எப்பாடு பட்டாவது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என, ஏமார்ந்து போவது என்னவோ ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்கள் தான்.

✍  பயிற்சி வகுப்புகள் நடத்துவது தவறில்லை; ஆனால், எந்தவொரு முறையான பாடத்திட்டமும் இல்லாமல் அதிகப்படியான சேர்க்கைக்காகவும், பணத்திற்காகவும் பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஏற்புடையதல்ல. சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று "போலியான பாடத்திட்டங்களை (Fake Syllabus)" உருவாக்கி அவற்றை கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என சமூக ஊடகங்களிலும், WhatsApp குழுக்களிலும்‌ பகிர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.

✍  தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் இந்த குற்றச்சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கணினி ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

✍  அதனால், இந்தமாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க உடனடியாக கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிட வேண்டும் என அனைத்து கணினி ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

✍  கணினி ஆசிரியர்களின் நலன் கருதி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை (Syllabus) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை ??

செய்தித்தொகுப்பு :-

✍  கு.ராஜ்குமார், MCA., B.Ed., 
Cell : 9698339298

திட்டக்குடி (03-03-2019).

21 comments:

 1. Call me immediately for UG with BEd (Bsc,CS,IT,BCA with BEd) 9092770075

  ReplyDelete
  Replies
  1. Number ah yenda kudutha asigama thituvagaley

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Arivu keta mundam trb only for pg b.ed only.

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 3. Ama sekarama number kuduga ivar case potadhum gov bayandhu poiruvaga poi posting podama vitruvaga

  ReplyDelete
 4. Y u r doing like this?please don't put case..its great opportunity for all b.ed cs pg teachers..

  ReplyDelete
 5. If u want u wait and strike for UG teachers after putting the PG post..FIRST GOVERMENT WILL IMPLEMENT THE 6TH SUBJECT COMP.SC IN SCHOOL..AFTER U WILL FILE THE CASE..DONT DO NOW..DON'T PLAY WITH PG CS TEACHERS LIFE MR.GUNA..

  ReplyDelete
 6. After 2014 CS seniority, The goverment will take a new step.plz don't spoil this OK..we r waiting for 10 years..we r facing lot of problems and lots of pain in private schools..

  ReplyDelete
 7. Please don't do anybody.. friends..its our life..don't spoil our life..

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. Entha naai case potalum onnum nadakathu da

  ReplyDelete
 10. exam vachu posting potathan nichayam intha govt ta..elam election kana eamathu vela vote u vaankirathukaga..540 guest lecturers govt arts college la entha advtm kudukamalayea lanchatha vaankitu fill panitanunga intha govt..this is true..venumna govt college la ketu paarubga..ivanunga intha aatchi a kaapathikirathuku ipadi cal for ngra pearla eamathuranunga..dmdk ta ivanunga valiya valiya porathulayea theriya laya friends..cptain a assembly la vachu asinga paduthinanunga..you tube la paarunga..so election la admk+ ki vote u podathinga..vilithu kolungal friends..

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. ஒரு ஆணியும் வைக்க வேண்டாம்...
  Seniorityபடியே போட்டால் எந்த தில்லுமுல்லும் நடக்காமல் நியாயமாக இத்தனை வருடம் காக்க வைத்த குற்றத்திற்கான பிராயச்சித்தம் செய்தால் போதும்..
  யாரும் பாதிக்கப்படாமல் யாரும் காசைஇழக்காமலும்,
  காசை ஏமாற்றாமலும்,நியாயப்படி,தர்மப்படி வாய்ப்பு கிடைக்கவேண்டியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது கொஞ்சமாவது நீதிபெருவார்கள்...

  ReplyDelete
 13. Tet,trb,போன்ற தகுதித்தேர்விற்கு மட்டுமின்றி
  Neetபோன்ற தகுத்தேர்விற்கும் சேர்த்து தான்
  கோச்சிங்சென்டரில் பணத்தை இழந்துபோதும்...
  எங்கள் தகுதிக்கு அளவுகோளை உங்கள் இஷ்டத்திற்கு எதன் அடிப்படையில் மாற்றுகின்றீர்கள்...
  உடனே
  தரம் என்ற புழுத்துப்போன, நமத்துப்போன அளவுகோளைதூக்காதீர்கள்....
  ஏனெனில்
  நீங்கள் கலப்படம், கள்ளத்தம் செய்வதற்காகவே கண்டுபிடித்த வார்த்தை தான் தரம்..
  மற்றொரு வாதம்
  நுறு இடம் தான் இருக்கிறது,லட்சக்கணக்கான வர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது வடிகட்ட வேண்டாமா???
  முதலில் அடியில் பாத்திரம் நிறைந்தால்(வேளைவாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்றால்) அடுத்த புதிய புதிய பாத்திரத்தை(வேளைவாய்ப்பு களை)
  எப்படி பயன்படத்தி எப்படி அனைத்து தரப்பு மக்களும் பயனுள்ள வேலையை செய்யலாம் என்று யோசித்து பாருங்கள்....
  புதிய புதிய அரசு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.இதில் முக்கியமான விஷயம் உடனே அரசு அனைவருக்கும் எப்படி தரமுடியும் என்று கொடிபிடிக்கும் அறிவாளிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து பிரிவினரிடமிருந்து வரி வசூல் செய்து பெரும் முதலாளிகளுக்கு அரசுநிலம்,8வழிச்சாலை,விமானம்போக்குவரத்துமற்றும் கப்பல் தளங்கள் வரை வைத்துக்கொடுக்க உதவுவதுடன் அனைத்து அரசக்கடமைகளையும் செய்யும் இந்திய குடிமகனுக்காகவும் கொஞ்சம் மூளையை கசக்கிப் பிழிந்து செயல்படுத்தக்கூடிய செயல் திட்டங்களை கொண்டு வர வேண்டும்
  அனைத்தையும் வடிகட்டி வேஸ்ட் பண்ணவேண்டும் என்று அர்த்தம் இல்லை...

  ReplyDelete
 14. Download the new syllabus

  https://drive.google.com/file/d/1nj8gmcC1F-0JAvkDb_0t0vBMMn4JuP-J/view?usp=drivesdk

  PG computer instructor examiners WhatsApp link

  https://chat.whatsapp.com/Jtld3d7EJYd6tKQRAj1zvg

  ReplyDelete
 15. 2019 TET PAPER 1 & 2 TEST BATCH & பயிற்சி வகுப்பு

  TET PAPER 1 & 2 பயிற்சி வகுப்புகள் 04.03.2019 முதல் ஆரம்பம்

  120 UNIT TESTS & 10 FULL TESTS

  PSYCHOLOGY & ENGLISH க்கு அதிக முக்கியத்துவம்

  அடிப்படை ENGLISH தெரிவித்தார்கள் கூட ENGLISH ல் 24 மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்சி

  120 மதிப்பெண் எளிதாக எடுக்கும் வகையில் பயிற்சி

  100% வெற்றி உறுதி

  புதிய & பழைய புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR,
  JUNCTION,
  SALEM - 630 005

  PH: 9488908009; 8144760402

  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
 16. நான் Ug with B. Ed, ஆகையால் வழக்கு பதிய உள்ளேன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி