தென் மாவட்டங்களில் ஏப். 17-ல் கனமழைக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2019

தென் மாவட்டங்களில் ஏப். 17-ல் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

‘‘தமிழகம் முழுவதும் வெயில்தாக்கம் பரவலாக உயர்ந்து வருகிறது.
மாநிலத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுதவிர சேலம், கரூர், மதுரையில் தலா 104, தருமபுரி, வேலூர், திருநெல்வேலி, திருச்சியில் தலா 104, நாமக்கல்லில் 102 மற்றும் கோவையில் 101 டிகிரி வெப்பம் பதிவானது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையேகாணப்படும்.கடல் காற்று தாமதமாக நிலத்தை நோக்கி வீசுவதால் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மத்திய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி வரை உயர்ந்திருக்கும்.

இந்நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 17-ம் தேதி பரவலாக மழை பெய்யும். கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி