நீட் தேர்வு 2019 - எழுதும் மாணவர்கள் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள் - kalviseithi

Apr 12, 2019

நீட் தேர்வு 2019 - எழுதும் மாணவர்கள் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்


தேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ள நிலையில், மாணவர்கள் பின்வரும் 6 தவறுகளைச் செய்யாமல் தவிர்க்க பயற்சி எடுத்துக்கொள்வது நல்லது.

ஹைலைட்ஸ்

பெரும்பாலான மாணவர்கள் செய்யும் தவறு கேள்வியைகவனமாக வாசிக்கத் தவறுதல்அடிப்படைகளை விரல் நுனியில் வைத்திருப்பது, தவறுகளைத் தவிர்க்க உதவும்.2019ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய ஆறு விஷயங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்த ஆண்டு வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் சில விஷயங்களில் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்கு வேண்டும். தேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ள நிலையில், மாணவர்கள் பின்வரும் 6 தவறுகளைச் செய்யாமல் தவிர்க்க பயற்சி எடுத்துக்கொள்வது நல்லது.

தவறு 1: கேள்வியை கவனமாக வாசிக்கத் தவறுதல்

பெரும்பாலான மாணவர்கள் செய்யும் தவறு இதுதான். இந்த கவனக்குறைவான செயலால் தவறான விடையை எழுத நேரிடுகிறது. எனவே, அனைத்து கேள்விகளையும் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுடன் கவனமாகப் படித்து புரிந்துகொண்டு விடை எழுத வேண்டும்.

தவறு 2: சீரான வேகத்தை கடைபிடிக்கத் தவறுதல்

வினாக்களுக்கு விடையளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வேகமாக பதிலளிப்பது அவசியம். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சீரான வேகத்தில் விடை எழுத பயில வேண்டும்.

தவறு 3: போதிய நேர மேலாண்மை இன்மை

வினாத்தாளில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வசதியாக ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அளவு நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தேர்வு நேரம் முடிவதற்கு 10 நிமிடங்கள் முன்பே அனைத்து கேள்விகளுக்கு விடையளித்து முடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முறை சரிபார்த்துக்கொள்ள நேரம் இருக்கும்.

தவறு 4: துல்லியமான விடையை எழுதத் தவறுதல்

வேகமாக எழுத வேண்டியது அவசியம் என்றாலும் விடைகள் துல்லியமானவையாக இருக்க வேண்டியதும் கட்டாயம். தவறினால், நெகட்டிவ் மார்க் பெற நேரிடும். அடிப்படையான விஷயங்களைத் தெளிவாக புரிந்து விரல் நுனியில் வைத்திருப்பது, இத்தவறைத் தவிர்க்க பெரிதும் உதவும்.

தவறு 5: ஊகித்து பதில் எழுதுவது

தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால், பதில் தெரியாத கேள்விகளுக்கு ஊகித்துபதில் எழுதுவது பெரிய தவறு. பதில் தெரியவில்லை என்றால் அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்ல வேண்டும். ஊகித்து பதில் எழுதுவது கூடாது.

தவறு 6: கணக்கீட்டில் பிழை

வேகமாக எழுதிவரும்போது சில எளிமையான கணக்கீடுகளில்கூட பிழை வந்துவிடக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நேரத்தை வீணாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.எனவே, கணக்கீடுகளைச் செய்யும்போது சிறப்பு கவனம் தேவை.

1 comment:

  1. முதலில் கவனிக்க வேண்டியது: NEET எழுதும் மாணவர்களுக்கு தெரிந்தவர் யாவரும் admk+ க்கு vote போடாம இருக்கிறார்களா எனப் பார்ப்பது.

    இரண்டாவது, அவர்களை dmk+ க்கு வாக்களிக்க வைப்பது

    இப்படிக்கு
    admkவால் அரசு வேலை கனவை இழந்து தவிக்கும் ஒருவன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி