தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2019

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பி்ரிவினரை கொண்டு 465 காலிப்பணியிடமும், தனியாக மலைவாழ் இனத்தவரைக்கொண்டு 99 காலிப்பணியிடமும் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு வயது தகுதியாக 1.7.2019ம் தேதியில் 21 முதல் 30க்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கு உரிய சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. உடற்தகுதியாக ஆண்கள் 163 செ.மீ. உயரமும், பெண்கள், திருநங்கைகள் 150 செ.மீ. உயரமும் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே மூன்றாவது வாரம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கணினி மூலம் ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜூன் 4வது வாரத்தில் நடக்கிறது. 100 மதிப்பெண்ணுக்கு 3 மணி நேரம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தகவல்களை அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி