கார்பன் டேட்டிங் என்றால் என்ன?... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2019

கார்பன் டேட்டிங் என்றால் என்ன?...


கனகவள்ளி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள்.

அந்த குடியிருப்பு உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுநகரத்தில் உள்ள குடியிருப்பு.



அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு
“ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள்.

“இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள்.

இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார்.

“அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.

இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள்.

ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தெரிவித்து விட்டு கனகவல்லியிடம்

“சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “

“சத்தியமா எனக்கு தெரியாது ரிச்சா ஆண்டி”

“அது தெரிஞ்சிருக்கனும்ல. சரி கார்பன்னா என்ன”

“கார்பன்னா அது ஒரு தனிமம். கரி.நம்ம உடம்புல நிறைய கார்பன் இருக்கு”

“சரி கார்பன் அணுக்குள்ள எத்தனை புரோட்டான் எத்தனை எலக்ட்ரான் இருக்கு, எத்தனை நியூட்ட்ரான் இருக்கும்”

“கார்பன் அணுவுல 12 புரோட்டான், 12 நியூட்ரான், 12 எலட்ரான் இருக்கும்”

“ம்ம்ம் சரியாக சொன்னாய். நீ சொல்ற கார்பனை Carbon 12 அப்படி சொல்லுவாங்க”

“அது தெரியும் ரிச்சா ஆண்டி”

அதே மாதிரி கார்பன் 14 அப்படின்னு ஒரு தனிமம் இருக்கு”

“ Carbon 14 ஆ”

“ஆமா.  Carbon 14 ல, ரெண்டு நியூட்ரான் அதிகமா இருக்கும். அங்க 12 நியூட்ட்ரானுக்கு பதிலா 14 நியூட்ரான் இருக்கும்”

“அப்படியா”

“ஆமா கனகவல்லி  Carbon 14  கதிர்களை வெளியிடும். அதாவது Radio active rays வெளியிடும்”

“ஒஹோ”

“இப்ப என் உடம்புல எவ்வளவு Carbon 12 இருக்கோ அதே அளவுதான் Carbon 14 ம் இருக்கும். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் வெளியாகுற Carbon 14 ன என் உடம்பு வெளிய இருந்து எடுத்துக்கும்”

“அப்போ உயிரோட இருக்கிறவரைக்கும் நம்ம உடம்புல Carbon 12 ம் , Carbon 14 ம் சம அளவுல இருக்கும்”

“ஆமா கனகவல்லி. சமமா இருக்கும். மனிதனோட உயிர் போனதுக்கு பிறகு Carbon 14  கதிரா வெளியே போக ஆரம்பிக்கும்”

“ம்ம்ம்”

“ஒரு கிராம் கார்பன் 14  கதிரா வெளியேறி அரை கிராம் கார்பன் 14 ஆகறதுக்கு தோராயமா 5600 வருடங்கள் எடுத்துக்கும்”

“5600 வருடங்களா ரிச்சா ஆண்டி”

“ஆமா அதோட எடைல பாதி ஆகுறதுக்கு  Carbon 14 வந்து 5000 years எடுத்துக்கும். இத Half life period ன்னு சொல்லுவாங்க”

“ஒஹோ”

“இப்ப ஒரு பழமையான பொருளோட வயதை கண்டுபிடிக்க அதுல ஒரு பகுதி எடுத்துப்பாங்க. அதுல இருக்கிற Carbon 12 அளவ கணக்கிடுவாங்க. அது 100 சதவிகிதம்னு எடுத்துப்பாங்க. அப்புறம் அதுல Carbon 14 எவ்வளவுன்னு கணக்கிடுவாங்க. Carbon 12 இருக்கிற அளவுல Carbon 14  எவ்வளவு இருக்குன்னு பாப்பாங்க”

“அத வைச்சி Carbon 14 சதவிகிதம் கணக்கிடுவாங்க அப்படித்தானே”

“சரியா சொன்ன கனகவல்லி இப்போ Carbon 14  பாதி அளவுதான் இருக்குதுன்னா அது 50% இருக்குன்னு அர்த்தம்”

“ஒஹோ”

”Carbon 14 100% to 50 % ஆக எவ்ளோ வருசம் எடுத்துக்கும்”

“5600 வருடங்கள்”

“அப்போ அந்த பொருளோட வயது 5600 வருடங்கள்”

“சரி ரிச்சா ஆண்டி ஒருவேளை Carbon 14 வந்து 25 % இருந்தா.”

“ 100 டு 50 அக 5600 வருடங்கள். 50 டூ 25 ஆக 5600 வருடங்கள் மொத்தமா”

“5600 + 5600 = 11200 வருடங்கள் ரிச்சா ஆண்டி”

”இதை அடிப்படையா வைச்சி அதுக்கு ஃபார்முலா இருக்கு. அத வைச்சி வயசு கண்டுபிடிப்பாங்க. இதுதான் Carbon dating சரியா

“ரொம்ப தேங்ஸ் ரிச்சா ஆண்டி”

“எப்பவுமே தமிழ் மொழி, தமிழ் அப்படின்னு கொண்டாடினா மட்டும் போதாது. எந்த முறைல தமிழ் பழமைன்னு தெரிஞ்சி வைச்சிருக்கனும். அதுதான் முக்கியம் சரியா.இந்தியா மாதிரி நாட்டுல மொழி அடிப்படைவாத நோக்கத்துல இந்தி ஆதிக்கம் செலுத்த காத்திட்டு இருக்கும் வடமாநில அரசியல்வாதிகள் இருக்கிற நாட்டுல அந்த அந்த மாநில மக்கள் அவுங்க அவுங்க மொழியை காப்பாத்துறதுக்கு அறிவியல்பூர்வமா விழிப்பா இருக்கனும் சரியா.”

“சரி ரிச்சா ஆண்டி”

“சரி தமிழுக்கு ரிச்சா ஆண்டியோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் போய் எல்லாருக்கும் சாக்லேட் கொடும்மா”

கனகவல்லி மிட்டாயை எடுத்துக் கொண்டு ஒடினாள்.   

படித்தது

2 comments:

  1. கார்பன் 12ல்
    நியூட்ரான் 6
    புரோட்டான் 6 எலட்ரான் 6
    மூன்றும் சமமாக இருக்கும்
    கார்பன் 14ல் நியு ட்ரான் 2 அதிகமாக 8 இருக்கும்
    Copy and PaSte செய்யும் போது பார்த்து செய்யவும்
    இப்படிக்கு
    சோக்காடி சரவணன்

    ReplyDelete
  2. Atomic number of carbon is 6

    Atomic number=number of protons or number of electrons

    Number of protons is always equal to number of electrons

    Here number of protons and number of electrons are given as 12

    Please try to change sir

    Your work is excellent sir,I expect some more informations

    thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி