வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல் - kalviseithi

Apr 15, 2019

வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்


*வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார்  ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஆ. அண்ணாதுரை

*ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது

*தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கு முன் தினம், வாக்குப் பதிவு தினம் மற்றும் வாக்குப் பதிவுக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும்

*புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள அட்டையாக அனுமதிக்கக் கூடாது

*தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 அடையாள சான்றுகளை மட்டுமே வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்

*மாதிரி வாக்குப்பதிவின்போது அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

*வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

*வாக்குச் சாவடிக்கு மாலை 6 மணி வரை வாக்களிக்க வரும் வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தர வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி