தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2019

தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை


தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேர்தல் பணியின் போது, சேலத்தில், ஆசிரியை நித்யா, சிறப்பு தாசில்தார், ரமேஷ்; திருப்பூரில், கிராம நிர்வாக அலுவலர், செந்தில் குமார்; விருதுநகரில், உதவியாளர், திலகமாதா ஆகிய, நான்கு பேர் இறந்தனர்.

தஞ்சாவூரில், பறக்கும் படையில் இடம் பெற்றிருந்த,'வீடியோ'கிராபர், ராஜ்கமல் காயமடைந்தார்.அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் விபரம் கேட்டுள்ளது. பொதுவாக தேர்தல் பணியின் போது, இறந்தவர்கள் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். பலத்த காயமாக இருந்தால், 5 லட்சம் ரூபாய்; லேசான காயத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி, விரைவில் வழங்கப்படும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி