வங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2019

வங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு


வங்கிகள் வரும் ஜுன் 1-ம் தேதிமுதல் வாரத்துக்கு 5 நாட்கள்தான் செயல்படும் என ரிசர்வ் வங்கிஉத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

வங்கிகள் முன்பு வாரத்துக்கு 5 நாட்கள் முழு வேலை நாளாகவும் சனிக்கிழமை மட்டும் அரை வேலை நாளாகவும் செயல்பட்டு வந்தன.பின்னர், ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாதத்தின் முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமை முழு வேலை நாளாகவும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது, இந்த நடைமுறை அமலில் உள்ளது.

புதிய நடைமுறை

இந்நிலையில், வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. வரும் ஜுன் மாதம் முதல் இப்புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்காக, வங்கிகளின் பணி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை என மாற்றியமைக்கப் பட்டுள்ளதாகவும் இதற்கு ரிசர்வ்வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அத்துடன், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் தகவல் வைரலாக பரவி வருகிறது.

வாரத்துக்கு 5 நாட்கள்

இந்நிலையில், இத்தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள்தான் செயல்படும் என சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இச்செய்தி முற்றிலும் தவறானது. ரிசர்வ் வங்கி அதுபோன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி