அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]


அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் ஆதார் அடையாளம் என்பது அரசின் மானியம், உதவி போன்ற திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆதார் சட்டம் பிரிவு 7ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு மாறாக தமிழக அரசு பள்ளிகளில் வருகைப் பதிவிற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது. இது எங்களின் அடிப்படை உரிமையைப்பாதிக்கும். எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவிற்கான பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழக அரசின்  உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த 4-ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் பொதுமான தேர்ச்சி விகிதம் காட்டாததால் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர் என அதிருப்தி தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 comments:

  1. apdiye private school vachu nadathuravangala

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education
    Krishnagiri
    Contact :9344035171

    ReplyDelete
  3. ஆசிரியர் சொத்துக்களை ஆய்வு செய்தபின்,பல ஆசிரியர்களின் வாழ்வாதரங்கள் மோசமாக இருக்குமேயானால் நீதிஅரசர்கள் இந்த ஆசிரியர்களுக்கு என்னென்ன சலுகைகள்,வாழ்வாதாரம் மேம்பட என்னசெய்வார்கள்?

    ReplyDelete
  4. ஆசிரியர்களை ஊழல் வாதிகள் என்று சொன்ன ஒரே நீதி மன்றம் இதுதான்....


    உலக அளவில் இதுபோன்ற ஒரு ஆணை வந்து இருக்காது.....


    நீதிக்கு இழுக்கு.....தலை குனிவு.....

    ReplyDelete
  5. Neethibathigaley unga sothuk kannaka yaru sariparpathu , kadavula?

    ReplyDelete
  6. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆசிரியர்கள் சார்பாக பத்திரிகையாளனின் விண்ணப்பம்...

    அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்கள் குறித்து தாங்கள் வெளியிட்டிருக்கும் கருத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள். ஒரே ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும்.

    சொத்து அதிகமாக இருக்கும் ஆசிரியர்களிடம் பிடுங்கிக் கொள்ளுங்கள். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    அதே சமயத்தில், வீடு வாங்க, வீடு கட்ட, குடும்பத்தாரின் மருத்துவ செலவுக்கு, தங்கை, தம்பி கல்யாணத்திற்கு என பல காரணங்களால் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கடன்களை உடனே ரத்து செய்து விட வேண்டும். ஏனெனில் அவர்களின் நேர்மையை சோதித்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டீர்கள் என்பதற்காக...

    நீங்கள் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல் ஆசிரியர்களோடு நிற்கக்கூடாது. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என நினைக்கிறேன்.
    நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்திருக்கிறார்கள். கவுன்சிலரிடமே இப்படி எனில் அதன் தலைவர், எம்.எல்.ஏ, எம்.பி க் களை சொல்லவா வேண்டும்.

    ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டுமென்று சொன்ன போது, நேர்மையாளர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து சில நேர்மையான அதிகாரிகள் மட்டுமே சொத்துக் கணக்கை வெளியிட்டனர். மீதமுள்ளோரின் சொத்துக்கணக்குகளை தோண்டச் சொல்லுங்கள்.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு நீதிபதியும் தங்களது சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி மேனாள் நீதியரசர். கே.சந்துரு அவர்கள், ஓய்வு பெறும்போது, தனது சொத்துக்கணக்கை தாக்கல் செய்தார். அதன்பிறகு எத்தனை நீதிபதிகள் இதை செய்துள்ளனர்? செய்ய இருக்கின்றனர்?

    நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள சுகாதார அலுவலர்கள் என்கிற SO-க்கள், உதவிப்பொறியாளர்கள், விஏஓக்கள், ஆர்.ஐ.கள், தாசில்தார்கள், சுங்கத்துறை அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள் என இவர்கள் சொத்து விவரங்களை கணக்கெடுங்கள் நீதிபதியே...

    ஆர்டிஓ, சப் ரெஜிஸ்டார் என நீங்கள் தோண்டி எடுக்க வேண்டிய பட்டியல் மிகப் பெரிது. நான் இங்கு குறிப்பிட்டுள்ள ஆட்களின் சொத்துக்கணக்கை கணக்கெடுங்கள்.
    தமிழ்நாட்டின் பத்து ஆண்டு பட்ஜெட்டை நிவர்த்தி செய்து விடலாம்.

    மேற்சொன்ன அனைவரும் சொத்துக்கணக்கில் சுத்தமாக இருந்தார்கள் எனில், அவர்கள் மேல் வீண் பழி சுமத்தியதற்காக என்னை நாடு கடத்துங்கள்...

    ReplyDelete
  7. Ennoda sothukalai ellam eduthuktu kadanai mattum neenga adaichiduringala honourable judge.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி