பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2019

பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை!


மாதிரி பள்ளிகள் குறித்து ஆலோசனை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர், திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில், ஏதேனும் ஓர் அரசு பள்ளியை தேர்வு செய்து, 50 லட்சம் ரூபாய் செலவில், மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த சிறப்பான ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மாதிரி பள்ளிகளிள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குனர் முருகன் ஆகியோர், 32 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.மாதிரி பள்ளிகளின் செயல்பாடுகள், மாதிரி பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கேட்டறிந்தனர்.தொடர்ந்து, அடுத்த ஆண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி,ஆலோசனை வழங்கினர்.

1 comment:

  1. எப்படி ஆசிரியர்களை மன உளைச்சலாக்குவது. எப்படி தனியார் பள்ளி சேர்க்கை அதிகரித்து அரசு பள்ளியை மூடுவது. 25% லிருந்து 50% அரசு சலுகையுடன் தனியார் பள்ளி சேர்க்கை அதிகரிப்பது. போன்ற கருத்துகள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி