இவ்வளவுக்குப் பிறகும் இனி தேர்தல் பணி தவிர்ப்போம் என்றா எண்ணுகிறீர்கள்????( படித்ததில் பிடித்தது) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2019

இவ்வளவுக்குப் பிறகும் இனி தேர்தல் பணி தவிர்ப்போம் என்றா எண்ணுகிறீர்கள்????( படித்ததில் பிடித்தது)


தேர்தல் திருவிழா

மூன்று நாட்கள் பயிற்சி
வசிப்பிடத்திற்கும்
பணியிடத்திற்கும்
சம்பந்தமேயில்லா
தொலைவிடத்தில்...
எவ்வித பயிற்சியும்
வழங்காமலேயே...
அடிப்படை வசதிகள்
ஏதுமில்லா
தேர்தல் மையங்கள்..
உறவு துறந்து
ஊண் உறக்கம் துறந்து
ஊர் பறவையாய்....
நீரில்லாமல்
உணவில்லாமல்
காற்றை மட்டுமே சுவாசித்து வாழுமாம் சாதகப் பறவை...
தேர்தல் பணியாற்றும்
ஒவ்வோர் ஆசிரியரும்
சாதகப் பறவையே...
வான் பார்த்து
குளித்ததுண்டா நீங்கள்??
நாங்கள் குளிப்போம்
நட்சத்திரங்களுடன்
உரையாடிக் கொண்டே...
குருவி குயில் ஆந்தை
கண்டோம்
பாம்பைதான் காணவில்லை
அதற்கும்
முதலுதவிப் பயிற்சி
பெற்றே இருக்கிறோம்..
11 மணி நேரம்
அமர்ந்த இடத்திலிருந்து
அசையாமல் இருந்ததுண்டா...
இயற்கை உபாதைகளுக்கும்
இடம் பெயராமல்..
கின்னசில்தான்
இடம்பெறவில்லை..
அனைத்து வகை
மக்களையும் கையாளும் மந்திரவாதி
நாங்கள்
கற்றவர் கல்லாதவர்
பணக்காரர் பாமரர்
முட்டாள் மூர்க்கர்
முக்கியமாய்
'குடிமகன்', களையும்
சேர்த்தே...
இவ்வனைத்தும்
கடந்து கடமையாற்றும்
எங்கள் முகத்தில்
சினமோ வெறுப்போ
காழ்ப்புணர்வோ
சிறிதேனும்
கண்டதுண்டா...
'செவாலியே விருது',
எங்களுக்கே உரியது...
100 முறை ஒரே எண்ணையும்
ஊரையும் எழுதியதுண்டா...
பள்ளிப் பருவத்தை
கடக்கவில்லை இன்னமும் நாங்கள்
எழுதிக் கொண்டே....
அனைவரிடமும்
அன்பு பாராட்டி
அனைத்தும் முடித்து
அதிகாரியை
ஆர்வமாய் எதிர்நோக்கி இன்னிசை இரவில்..
முட்டாள் மாணவராய்
எமை எண்ணி
முந்நூறு முத்தான
கேள்விகளால்
கணை தொடுக்கும்
கனவானையும் சமாளித்து
சமர்ப்பித்த பின்னே
சமநிலைக்கு வருவோம்...
இனிதான் இருக்கிறது
இனிமையே...
இதுவரை கடமையாளராக
காட்சியளித்த நாங்கள்
இரவில் இன்னலின்றி இல்லம் திரும்புவது
எவ்விதம்...
இதைப் பற்றிய எவ்விதக் கவலையும்
கொள்ளா நிர்வாகத்தால்
'அனாதைகளாய்',
தெருவில் நாங்கள்...
அன்றும் இன்றும்
என்றும்
எங்களுக்குத் துணை
எங்கள் சக ஆசிரியர்களே
அவர்கள் ஆணோ, பெண்ணோ...
சரி இத்தனையும்
கடந்த எங்களுக்கான
உழைப்பூதியம்
அறிவீரா??..
வாக்குச்சாவடி அலுவலர் 1700/_
பிற அலுவலர் 1300/_
இதைத் தூக்க இயலாமல்
தூக்கிக் கொண்டு
இல்லம் திரும்பினோம்
இரு நாட்களுக்குப் பிறகு நடு நிசியில்....
இவ்வளவுக்குப் பிறகும்
இனி தேர்தல் பணி
தவிர்ப்போம் என்றா
எண்ணுகிறீர்கள்????
இல்லவே இல்லை
இனிமையாய்
பணியாற்றுவோம்
இனியும்.....
ஏனெனில் ஏனெனில்
அரசுக்கும் சமுதாயத்திற்குமான
இறைதூதர்கள்
நாங்களே.....
ஆசிரியப் பணி
அறப் பணி...
பெருமையும் கர்வமும்
கொள்கிறோம்
அரசுப் பள்ளி
ஆசிரியராய்...

26 comments:

  1. Private school teaches are working like this each and everyday work.

    ReplyDelete
    Replies
    1. தனியார் பள்ளி ஆசிரியர்கள் அவ்வளவு சிரமப்பட்டு அங்கு வேலை செய் யாதீர்கள் நன்றாகப் படித்து அரசின் வேலையை உடனே வாங்கி விடவும்

      Delete
  2. மனகுமறலையும் கர்வதத்தையும் காட்டியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. மனக்குமுறலையும் பெருமிதத்தையும் காட்டியுள்ளது

      Delete
  3. தேர்தல் பணியை மறுத்தால் பலன் ஏதும் இல்லை.. மாறாக , யார் எப்படி பேசினாலும் ஆசிரியர்களின் மீது உண்மையான அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் கிராமப்புற மக்களிடையே அவப்பெயரை தான் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் பணியை யாரும் மறுக்கவில்லை ஒரு சிலர் தேர்தல் பணியை புறக்கணித்து உள்ளார்கள் ஏனென்றால் பலன் இருந்திருக்கிறது அவர்களுக்கு

      Delete
  4. ஆசிரியர்களை ஊழல் துறை கண்காணிக்க வேண்டும் என்று சொன்ன நீதிபதிக்கு இக்கட்டுரை காணிக்கை.......



    இனியாவது சாப்பாடு சாப்பிடும் மனிதர்களாக குறை கூறுபவர்கள் நடந்து கொள்ளடும்......


    மலம் தின்னும் மானுடம் எண்ணி குருகட்டும்......

    ஆசிரியர் பணி இறைபணி......

    தர்மம் மட்டுமே வெல்லும் .......நியாயம் அதர்மத்தை கொள்ளும்...

    ReplyDelete
    Replies
    1. பின்னர் முட்டாள்களாய் வளர்க்க வேண்டிய மாணவர்களை கேள்வி கேட்கும் அளவிற்கு புத்திசாலி மாணவர்களாய் வளர்த்த ஆசிரியர்கள் ஊழல்வாதிகள் தானே

      Delete
  5. You are paid high salary. Do it without grievances or resign the job and seek private employment. Million graduates waiting outside to work for half of your salary. You try to understand situation and be happy with what you have been given. Work harder with serving mindedness. Otherwise your retirement life will become HELL.

    ReplyDelete
  6. ஆசிரியர் மட்டும் தான் தேர்தல் பணி ஆற்றுகிறார்களா.பிற துறையினரின் கடினமான பணிகளை அறியாத குடத்திலிட்ட விளக்குகள் நீங்கள்.ஆசிரியர் அடிப்படை பணி என்ன? பிறகு ஏன் தேர்வுத்தாள் மதிப்பீட்டிற்கு,தேர்வு கண்காணிப்பு பணிக்கு மதிப்பூதியம்.மே மாதம் விடுப்பில் ஊதியம்.

    ReplyDelete
  7. இது உங்கள் வேலை இது உங்கள் கடமை இதை சரிவர செய்ய வேண்டியது உங்கள் பணி இதை தொல்லையாக நினைக்காமல் மகிழ்ச்சியாக செய்து பாருங்கள் இந்த வேலையும் உங்களுக்கு இனிக்கும்

    ReplyDelete
  8. ஏதோ நீங்கள் மட்டும் தான் தேர்தல் பணி ஆற்றினீர்களா.பிற துறையினரின் பணியாற்றவில்லையா.இது உங்கள் தற்பெருமை.

    ReplyDelete
    Replies
    1. வேலை நிறுத்தத்தின் போது வெள்ளை பேப்பரில் அப்ளிக்கேஷன் போடும் நபர் நீங்கள் என நினைக்கிறேன்....

      Delete
  9. மிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது தேர்தல் வேலை பார்த்த அனைவரும் பணம் வாங்கிக் கொண்டுதான் வேலை பார்த்தனர் வாய்ப்பு அளித்தால் தனியார் பள்ளி ஆசிரியர்களும் இந்தப் பணியை சிறப்பாகவே செய்வார்கள் அரசு ஆசிரியர்களை மிகைப்படுத்த வேண்டாம்.

    ReplyDelete
  10. But, other dept, servants have the chance of bribe,but teachers have no chance!!we don't know why the society always blaming teachers only,not other govt servants!!!

    ReplyDelete
  11. தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு.. தேர்தல் பணியில் இருக்கும் போது mango juice, orange juice, tea, coffee, vadai, biscuit, மதியம் பிரியாணி, பணி முடியும் வரை ஊர் இளைஞர்களின் ஒத்துழைப்பு ... இதை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு .. ஒழுங்காக வேலை பார்ப்பவர்கள் கூட உங்களைப் பார்த்து கெட்டு விடுவார்கள்.

    ReplyDelete
  12. தற்பெருமை ஒரு மனநோய்.. இந்த மனநோய் பிடித்த ஊழியர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை மட்டுமல்ல, தாங்கள் சேர்த்து வைத்த குப்பைகளையும் அடுத்தவர் தலையில் கட்டி விடுவர்.. மிகவும் ஆபத்தான சமுதாய நோய் இந்த தற்பெருமை பிடித்தவர்கள்..

    ReplyDelete
  13. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்ற வில்லை என்றால் தேர்தல் சிறப்பாக நடைபெறாது.
    தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு அரசு வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியார் பள்ளியில் வேலை செய்யவில்லை அவர்கள் அரசுப் பணியை எதிர்நோக்கியே உள்ளார்கள் அரசு பணி என்பது சிறப்பான பணி

    ReplyDelete
  14. தேர்தல் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் தேர்தல் ஆணையம் ஆறு தகுந்த ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும் அதற்காக செலவினங்களை மட்டும் காட்டிவிட்டு எந்தவித வசதிகளும் செய்யாமல் இருப்பதுதான் தவறு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி