TET தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2019

TET தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை!!!


டெட் தேர்வு பிரச்சினை
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :

2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 3000 க்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்.ஆனால் அரசு இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்றுமுறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச்சம்பளம் பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.எனவே ஆசிரியர் அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுத்தும், ஏற்கனவே பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
98845 86716

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி