TNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை -பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2019

TNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை -பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு.


RTE அமலாக்கம் தமிழகத்தில் முறைப்படி செயல்படுத்தாத போது ஆசிரியர்கள் நியமனங்கள் நடந்தன.

இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர அரசு ஒப்புதல் அளித்தது.

TNTET நிபந்தனைகள் இவர்களுக்கு பொருந்தும் என்ற அறிவிப்பு வந்ததும் , பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் நாடினர். அதன் அடிப்படையில் சுமார் 9000  ஆசிரியர்கள் ( அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் ) TNTET லிருந்து விலக்கு பெற்றனர். 

மீதமுள்ள சுமார் ஆயிரத்து ஐநூறு ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்.

 இவர்களும் நீதிமன்றம் சென்ற நிலையில் கடந்த 07/09/18 ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.  அதன்படி இந்த அரசு உதவி பெறும் பள்ளி TNTET நிபந்தனைகள் தளர்வு சம்மந்தமான முடிவு அரசு எடுக்க நான்கு மாத கால அவகாசம் அளித்தது.

தற்போது அந்த கால அவகாசம் நிறைவு பெற்று பல நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை.

TNTET நிபந்தனைகள் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டது காரணமாக சம்மந்தமே இல்லாமல் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த வகை ஆசிரியர்கள் காலம்  முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தற்போது பயணித்து வருகின்றனர்.

 கடந்த காலங்களில் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கட்டாயாமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்து இருப்பதால், நீதிமன்றத்தில் ஆணைமீறல் முறையீடு தொடர வாய்ப்பு இருந்தும், இன்னும் கூட சில நாட்கள் காத்திருக்க தமிழக TNTET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

23/08/2010 - RTE - மத்திய அரசு உத்தரவு தேதி.

-------------------------------------

16/11/2012 - கல்வி இயக்குனர் செயல்முறைகள் - TET கட்டாயம்  தொடர்பான ஆணை.

ஆகவே எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தல்  முடிவுக்கு முன்னர் 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான கால கட்டத்தில் பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நலன் கருதி TNTET நிபந்தனைகள் தளர்வு செய்து அரசாணை வெளிவிட வேண்டும் எனவும்,  ஊதிய நிறுத்தம் தொடர்பான வதந்திகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவும்  வேண்டும்  என  பாதிக்கப்பட்ட TNTET  நிபந்தனை  ஆசிரியர் கூட்டமைப்பு   வேண்டுகோள்  விடுகிறது.

எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

அரசு விரைவில் தங்கள் கொள்கை முடிவில் மாற்றம் செய்து கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக பணிப் பாதுகாப்பு இன்றி சிக்கலில் தவித்து வரும் ஆசிரியர்கள் நலன் காக்கும்படி அரசாணை வெளிவிட வேண்டும்.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & EDUCATION
    Krishnagiri
    Contact :9842138560,9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி