108 மாணவர்களின் மருத்துவக் கனவு தகரும்நிலை; ஸ்டாலின் உதவியால் அரசு மருத்துவக்கல்லூரியில் மீண்டும் பயில வாய்ப்பு - kalviseithi

May 5, 2019

108 மாணவர்களின் மருத்துவக் கனவு தகரும்நிலை; ஸ்டாலின் உதவியால் அரசு மருத்துவக்கல்லூரியில் மீண்டும் பயில வாய்ப்பு


மூடப்பட்ட தனியார் கல்லூரியால் பாதிக்கப்பட்டு, தவித்ர்த 108 மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உதவியால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் பொன்னையா ராமஜெயம் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரி இந்திய மருத்துவக் கல்லூரியின் விதிகளையும், நிபந்தனைகளையும் சரியாகச் செயல்படுத்தாததால் கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ரத்து செய்தது.கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தடை விதித்தது.

இந்நிலையில், இந்தக் கல்லூரியில் படித்து வரும் 108 மாணவர்கள் தங்களை வேறு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் அவர்களை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இடம் அளிக்கவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உதவியை அம்மாணவர்கள் நாடினர். அவரது முயற்சியால் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடம் இடைத்துள்ளது.இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியான அறிக்கையில், ''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் ஆகியோரின் முயற்சியில் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் செயல்பட்டுவந்தபொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில சேர்ந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக, கல்வி தொடர இயலாத நிலை ஏற்பட்டது.

அதனால் பாதிக்கப்பட்ட 108 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் "பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பத்து நாட்களுக்குள்மாற்றிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு முன்மொழிவுகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு இன்று வரை பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்காததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களும் - அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்,பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஸ்டாலின் முயற்சி எடுத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 108 மாணவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், சுகாதாரச் செயலாளருக்கும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கும், கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி மனுஅளித்து 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தினார்.

மு.க.ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்டமாணவர்களும் - அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம், ஆகியோரின் முயற்சியில் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி யில் மருத்துவக் கல்வி பயில சேர்ந்த 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி