பிளஸ் 2 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு - kalviseithi

May 4, 2019

பிளஸ் 2 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு


பிளஸ் 2 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அதன்படி சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது.நாடு முழுவதும் மொத்தம் 12.87 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வுமுடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. இதில்83.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று (மே 4) முதல் மே 8-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணமாக பாடத்துக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற தேர்வர்கள் மே 20, 21-ம் தேதிகளில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் மே 24, 25-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பாடத்துக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இதற்கிடையே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச கவுன்சலிங் வழங்க சிபிஎஸ்இ ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 2-ம் தேதி முதல் இந்த ஆலோசனை மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எனவே, மே 16-ம் தேதி வரை 1800118004 என்றஇலவசதொலைபேசி எண்ணில் அல்லது counselling.cecbse@gmail.com மின்னஞ்சல் முகவரியில் மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு மதிப்பெண் தொடர்பான சந்தேகங்கள், உயர்கல்வி படிப்புகள், மனஅழுத்தம் உட்பட பல்வேறு சிக்கல்கள் குறித்துக் கேட்டு தெளிவு பெறலாம். இதற்காக71 நிபுணர்கள் கொண்ட பிரத்யேக சிறப்பு உதவிக்குழு அமைப்பு தினமும் இயக்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி