31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2019

31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல்


தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல் நிலைத்தேர்வில் பங்கேற்ற ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.மேலும் முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வ என இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி முதல்நிலைத் தேர்வுக்கு 3,562 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்வு நடந்தது.இந்நிலையில் முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கேள்விகள் கடினமாக இருந்ததாலும் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று கூறப்படுகிறது.

2 comments:

  1. அவ்வளவுதான் இவர்கள் அறிவு.....ஏற்கனவே உள்ள அனைத்து நீதி அரசர்களுக்கு தகுதி தேர்வு வைத்தால் நிறைய பேர் தேர்வாக மாட்டார்கள்.....


    ReplyDelete
  2. இதேபோல் அரசியல்வியாதிகளுக்கும் தகுதி தேர்வு வைக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி