சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு: 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம் - kalviseithi

May 10, 2019

சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு: 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம்


இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான  மூன்றாண்டு  சட்டப்படிப்புகளில்  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.இப்போது 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐந்தாண்டு படிப்புகளைப் பொருத்தவரை பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி முதல் நேரிலும், தபால் மூலமும் விநியோகிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.அதுபோல மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.கட்டணம் எவ்வளவு: சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 250 ஆகும்.தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை (www.tndalu.ac.in) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி