அனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு?: கல்வித்துறையில் சலசலப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2019

அனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு?: கல்வித்துறையில் சலசலப்பு!


மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கல்வி சேனல் துவங்கப்பட உள்ளது. அரசு 'செட்டாப்' பாக்ஸ் மூலம், இச்சேனலை காண முடியும்.மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, பாடங்களை மாணவ, மாணவியர் எளிதில், ஆர்வமுடன் புரிந்துக் கொள்ளும் வகையில், அனிமேஷன் விளக்கப்படம் தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள, மாவட்ட வாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இயக்கும் ஆற்றல் கூட இல்லை என்ற, சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள்கூறியதாவது; பாடங்களை எளிய முறையில், மாணவ, மாணவியர் மனதில் பதிய வைக்க வேண்டும்; அவர்கள் நல்லொழுக்கம் நிறைந்தவர் களாக வளர வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் வகுப்பறையில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கி, தற்போது, கல்வி சேனல் வரை அறிமுகம் செய்யப்படுகிறது.இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், ஆன்ட்ராய்டு போன், கம்ப்யூட்டர் உட்படசாதனங்களை மிக துல்லியமாக இயக்கவும், அனிமேஷன், பவர்பாய்ன்ட் தயாரிப்பது போன்றகம்ப்யூட்டர் சார்ந்த அறிவாற்றல் இருக்க வேண்டும்; அந்த அறிவாற்றல், கற்பனை திறன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அனிமேஷன், 3டி,5டி என, வளர்ந்து விட்ட நவீனதொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் கற்று, தங்களது கற்பனை ஆற்றல் மூலம் பலபுதிய படைப்புகளை கண்டறிந்த ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்களின் சிறப்பான படைப்பாற்றலுக்கு முந்தைய ஆண்டுகளில்மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை கூட பெற்றுள்ளனர்.

அத்தகைய தொழில்நுட்ப அறிவாற்றல் பெற்ற ஆசிரியர்களுக்கு, கல்வி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை; அவர்கள் ஓரங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு,அவர்கள் கூறினர்.

1 comment:

  1. எல்லாம் நாட்டாமை வாத்தியார்களின் வேலையாதான் இருக்கும்.. வகுப்பறையில் தமிழ் ராக்கர்ஸ் பார்ப்பது போதவில்லையா இந்த லகுட பாண்டியர்களுக்குள.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி