கால்நடை மருத்துவம் படிக்க, 'நீட்' தேர்வா? - kalviseithi

May 3, 2019

கால்நடை மருத்துவம் படிக்க, 'நீட்' தேர்வா?


''கால்நடை மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது,'' என, சேர்க்கை குழு தலைவர், செல்வகுமார் கூறினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புக்கு, 360 இடங்கள் உள்ளன.

இதில், 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.அதேபோல, உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு, 100 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்ப படிப்பில், ஆறு இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம், வரும், 8ம் தேதி முதல், ஜூன், 10 வரை வினியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, சேர்க்கை குழு தலைவர் செல்வகுமார் கூறியதாவது:அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங் மட்டுமே, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 402 இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறும்; நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறாது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி