உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை: ஆகஸ்டில் வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டம் - kalviseithi

May 31, 2019

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை: ஆகஸ்டில் வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டம்


உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

நகர, ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளுக்கான முதன்மை பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன. மாவட்டந்தோறும், முதன்மை பயிற்றுநர்கள் அனைவரும் பிற ஊழியர்கள்,பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்புகுறித்த பயிற்சிகளை அளிப்பர்.

இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு, வார்டு வாரியாகவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்கவும், அதன் பின்பு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இல்லை:

இதேபோன்று, நகரப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது எனவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி