கல்வி மாவட்ட அலுவலர் பதவிக்கு மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தல் - kalviseithi

May 31, 2019

கல்வி மாவட்ட அலுவலர் பதவிக்கு மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தல்


மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு பெறும் போது, அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலராக மேல்நிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக சட்டச்செயலாளர் அனந்தராமன், மாவட்டத்தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அமைப்புச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட தலைமையாசிரியர்கள் நேற்று மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில், 'மதுரை கல்வி மாவட்ட அலுவலர் இம்மாதம் (நாளை) ஓய்வு பெறுகிறார். ஜூன் 1ம் தேதி முதல் அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். இதுவரை பின்பற்றப்பட்ட சுழற்சி முறை மற்றும் இயற்கை நியதிகளின்படி மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறுகையில், 'மாவட்ட கல்வி அலுவலர் பதவியும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும் சமமானபதவிகள் ஆகும்.இதனால், கல்வி மாவட்ட அலுவலர்கள் ஓய்வு பெறும் போது, அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்படும். அதற்கு, மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மூத்த தலைமையாசிரியரைபொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும். இது நடைமுறையில் உள்ளது.

இதனை மாற்றக்கூடாது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். முதன்மைக்கல்வி அலுவலரும், பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்' என்றார்.

1 comment:

  1. DEO post filled through TNPSE SO Elegible HMS why not write
    that exam ?.At present most of the HMS IS not given the importance of NMMS and NTSC and NEET.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி