பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்? ஜூன் இரண்டாம் வாரம் தள்ளிப்போக வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2019

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்? ஜூன் இரண்டாம் வாரம் தள்ளிப்போக வாய்ப்பு


தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு,  அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.  இதைத் தொடர்ந்து கடும் வெயில் காரணமாக குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும்அவர்களது நலன் கருதி பள்ளித் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதேபோன்று சமூக வலைதளங்களிலும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மே இறுதி வாரத்தில் வரவிருக்கும் பருவநிலையைப் பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

4 comments:

  1. Oru varusam fulla leave vitrunga ongada nengalum unga kalvi thuraiyum. Veyil athigama irukunu paiyan soldrana

    ReplyDelete
  2. இப்பவே பல பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன

    ReplyDelete
  3. Please sir June second week you can start school

    ReplyDelete
  4. Please sir june second week you can start school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி