ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2019

ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்


ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 47 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 24 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 13 தன்னாட்சி மற்றும் 336 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தொழிற் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், பல தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் 2019-2020 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கல்லூரிகளின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கப்படும் மாணவர்கள், செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பாலிடெக்னிக் கல்லூரிகளும் ஏ.ஐ.சி.டி.இ-யின் உரிய அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பி்டத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி