மாணவர்களிடையே ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி; எம்இ, எம்டெக் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அறிவிப்பு - kalviseithi

May 3, 2019

மாணவர்களிடையே ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி; எம்இ, எம்டெக் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அறிவிப்பு


எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார். இதன்மூலம், 2 நுழை வுத்தேர்வை எழுத வேண்டுமோ என மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ இடங் களை மட்டும் நிரப்புவதற்கு சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்போவ தாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் உள்ள இடங் களை நிரப்புவதற்கானடான்செட் நுழைவுத்தேர்வை நடத்தப் போவது யார், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது.பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகம், தமிழக உயர்கல்வித் துறை இடையே மோதல் போக்கு தொடங்கியது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் இருப்பார். 2019-20 கல்வி ஆண்டில் அதில் மாற்றம் செய்து, உயர்கல்வித் துறை ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி, மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை உயர்கல்வித் துறையும் ஏற்றுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்தும் பொறுப்பு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. எனவே, பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கையைப் போன்று எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான ‘டான்செட்’ நுழை வுத் தேர்வையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்துமா அல்லது அண்ணா பல்கலைக் கழகமே தொடர்ந்து நடத்துமா, அண்ணா பல்கலைக்கழக கல்லூரி களில் சேருவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு, இதர கல்லூரிகளில் சேர இன்னொரு நுழைவுத் தேர்வு என 2 நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டுமா என்ற கேள்விகளும் எழுந்தன.இந்நிலையில், எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு தனித்தனி நுழை வுத் தேர்வுகள் இல்லாமல் வழக்கம் போல் ‘டான்செட்’ என்ற ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத் தியது. இதைத்தொடர்ந்து, ‘டான் செட்’ நுழைவுத் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் சுரப்பா கூறும்போது, ‘‘இந்த ஆண்டும் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படாது’’ என்றார்.இதையடுத்து, ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் ஓரிரு நாளில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. இன்னுமாடா அந்த MBA MCA கோர்ஸ் எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க?? வேலை கிடைக்குதா?
    MBAக்கு எதாச்சும் B-ஸ்கூல் தான போகணும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி