அரசு பதிவு பெற்ற இன்ஜினீயரின் சான்றுடன்தான் இனி வீடு கட்ட வேண்டும்: தமிழ்நாடு முழுவதும் கட்டாயமாகிறது - kalviseithi

May 3, 2019

அரசு பதிவு பெற்ற இன்ஜினீயரின் சான்றுடன்தான் இனி வீடு கட்ட வேண்டும்: தமிழ்நாடு முழுவதும் கட்டாயமாகிறது


அரசிடம் பதிவுபெற்ற இன்ஜினீயர் சான்றுடன்தான் இனி வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் கட்டுமானங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டாலோ அல்லது இடிந்து விழுந்தாலோ சம்பந் தப்பட்ட இன்ஜினியரின் பதிவு ரத்தாகும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந் தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அரசுக்கு மட்டுமின்றி வீடு வாங்குவோருக்கும் பெரிய பாடமாக அமைந்தது. இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகில் கட்டப்பட்டிருந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடமும் ஸ்திரத் தன்மையுடன் இல்லை என்ற நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் இடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கட்டிடங்களின் கட்டுமானத்துக்காக கூடுதல் விதிமுறை களைச் சேர்த்து அதைக் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டது. அதற்காக கட்டு மானத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற் றிடம் இருந்து கருத்துகள், ஆலோசனை கள் பெறப்பட்டன. பின்னர், புதிய விதிமுறைகளுடன் கூடிய அரசா ணையை தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்தது. இதன்மூலம் வீடுகள் மற்றும் இதர கட்டிடங்கள், இன்ஜினீயர்களின் அனு மதியுடன்தான் கட்டப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலமுருகன், அனைத்து கட்டு மானப் பொறியாளர்கள் சங்க கூட்ட மைப்பு (தமிழ்நாடு, புதுச்சேரி) மாநிலமக்கள் தொடர்பு அதிகாரி கோ.வெங் கடாசலம் ஆகியோர் கூறியதாவது:

அரசாணைப்படி கடந்த பிப்ரவரியில் இருந்து வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு,திட்ட அனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற இன்ஜினீயர்கள்தான் செய்ய வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட் டுள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரத்துக் குள் கட்டிடங்களை கட்டுவதென்றால் அதற்கு பதிவுபெற்ற கட்டிடக் கலை நிபுணர் (Registered Architect) அல்லது பதிவுபெற்றபொறியாளரின் (Registered Engineer) அனுமதியைப் பெறவேண்டும்.மிக உயரமான கட்டிடங்கள் தவிர, 12 மீட்டருக்கு மேல், 18.30 மீட்டருக்குள் கட்டுமானங்களைக் கட்டும்போது பதிவு பெற்ற டெவலப்பரிடம் அனுமதி பெற வேண்டும். இவர்கள்தவிர, ஸ்டக்சுரல் இன்ஜினீயர், கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினீ யர், ஜியோ டெக்னிக்கல் இன்ஜினீயர் ஆகியோரிடமும் அனுமதி பெற வேண்டும்.மிக உயரமான கட்டிடமாக இருந் தால், அவற்றுக்கு பதிவுபெற்ற டெவலப் பர், கட்டிடக்கலை நிபுணர், ஸ்டக்சுரல் இன்ஜினீயர், கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினீ யர், ஜியோ டெக்னிக்கல் இன்ஜினீயர், நகர அமைப்பாளர், தரமான தணிக்கை யாளர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும்.

கட்டிடம் கட்டி முடித்த பிறகு திட்ட அனுமதியின்படியேகுறிப்பிட்ட கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது என்று மேற்கண்ட இன்ஜினீயர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே கட்டிட நிறைவு சான்று வழங்கப்படும். அவ்வாறு கட்டப் படும் கட்டிடத்தில் பெரிய விரிசல், இடிந்துவிழுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்ஜினீயர்களின் பதிவு ரத்தாகும்.அரசாணைப்படி, பி.ஆர்க் முடித்து 2 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் கட்டிடக் கலை நிபுணர் கிரேடு 1 ஆக பதிவு செய்யலாம். டிப்ளமோ ஆர்க்முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் இருந் தால் கட்டிடக்கலை நிபுணர் கிரேடு 2 ஆக பதிவு செய்ய முடியும். பி.இ. முடித்து 10 ஆண்டுகள்அனுபவம் இருந்தால் இன்ஜினீயர் கிரேடு 1 ஆகவும், பி.இ. முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் இன்ஜினீயர் கிரேடு 2 ஆகவும், டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலோ, பி.இ. முடித்து3 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலோ அவர்கள் இன்ஜினீயர் கிரேடு 3 ஆகவும் பதிவு செய்யலாம்.

எம்.இ. முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் ஸ்டக்சுரல் இன்ஜினீயர் கிரேடு 1 ஆகவும், பி.இ. முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் இருந் தால் ஸ்டக்சுரல் இன்ஜினீயர் கிரேடு 2ஆகவும் பதிவு செய்ய முடியும். பி.இ. அல்லது பி.ஆர்க் முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் இருப்பவர்களும், டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்து 7 ஆண்டுகள் அனுபவம் உடையவர்களும் கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினீயராகப் பதிவு செய்யலாம்.எம்.இ. முடித்து 5 ஆண்டுகள் அனுபவமுடையவர் ஜியோ டெக்னிக்கல் இன்ஜினீயராகப் பதிவு செய்து கொள்ளலாம். நகரமைப்பு படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருந்தால் நகர அமைப்பாளராகப் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் சென்னையைச் சேர்ந்தவர் களாக இருந்தால் மாநகராட்சி அல்லது சிஎம்டிஏ-வில்பதிவு செய்ய வேண்டும். மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்ய வேண் டும். கட்டுமானத் தொழிலில் இந்த அரசாணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இதனால் தரமான கட்டுமானங்கள் உறுதி செய்யப்படும். இன்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். கூடுதல் விவரங்கள் மற்றும் இலவச ஆலோசனைக்கு http://faceatp.com (Federation of all Civil Engineers Association of Tamilnadu & Puducherry) என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த பிப்ரவரியில் இருந்து வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட அனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற இன்ஜினீயர்கள்தான் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி