அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர்


அரசு தேர்வுத்துறைக்கு, புதிய இயக்குனர் நியமிக்கப்பட உள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில், பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்கள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,ஒருங்கிணைந்த கல்வி திட்டம், முறைசாரா கல்வி திட்டம் உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன.

இவற்றின் தலைமை பதவிகளில், இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் போதும், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பதவிகளில், மாற்றம் செய்வது வழக்கம்.அதன்படி, ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மாற்றப்பட உள்ளனர்.தற்போது, தேர்வு துறை இயக்குனராக உள்ள வசுந்தரா தேவி, மார்ச், 31ல், ஓய்வு பெற வேண்டியிருந்தது.

தேர்தல் விதிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகள் காரணமாக, அவருக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜூன், 30ல், பதவிக் காலம் முடிகிறது.அவரது இடத்தில், புதிய அதிகாரியை நியமிக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதற்கான பட்டியல், தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இரு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கவும், அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கவும், பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள், ஜூனில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி