அரியர் பாடங்களை எழுத பொறியியல் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

அரியர் பாடங்களை எழுத பொறியியல் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


பொறியியல் படித்த மாணவர்கள் பழைய அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் ஜெ.குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:அரியர் பாடங்களை எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குமாறு பொறியியல் படித்த ஏராளமான மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதுகுறித்து கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது. மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்கதீர்மானிக்கப் பட்டது.அதன்படி, முந்தைய தேர்வு களில் தோல்வியடைந்த மாணவர் கள் அரியர் தேர்வுகளை எழுதவரும் நவம்பர், டிசம்பர் மாதத்திலும், 2020 ஏப்ரல், மே மாதத்திலும் 2 வாய்ப்புகள் அளிக்கப் படும். இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் இந்த கடைசிவாய்ப்பை பயன்படுத்தி பழையஅரியர் பாடங்களை எழுதி தேர்ச்சிபெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார் கள்.

இந்த வாய்ப்புகளை பின்வரும் இரு பிரிவினர் பயன்படுத்திக்கொள்ள தகுதியுடையவர் ஆவர்.பிரிவு-1: அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்கள் (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்)பிரிவு-2: அண்ணா பல்கலைக் கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் 2001-2002-ம் கல்விஆண்டு முதல் (3-வது செமஸ்டர்முதல்) சேர்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் 2002-2003-ல் (முதல் செமஸ்டர் முதல்) சேர்க்கப்பட்டவர்கள் (தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்தவர்கள் உட்பட).

இதுதொடர்பான விரிவான விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி மாணவர்களுக்கும்,பல்கலைக்கழக இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் மாணவர்களுக்கும் தனித்தனியே அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி