சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வுபயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2019

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வுபயிற்சி


பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வுக்கு, சென்னை பல்கலையில், இலவச பயிற்சி தரப்படுகிறது.கல்லுாரிகளில்,உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், 'நெட் அல்லது செட்' என்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

'நெட்'தேர்வு மத்திய அரசின் சார்பிலும், 'செட்' தேர்வு, மாநில அரசின் சார்பிலும் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு, சென்னை பல்கலையின் சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற பிரிவினர் பங்கேற்கலாம்.

சென்னை பல்கலையின், மாணவர் ஆலோசனை மையத்தின் சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஜூன், 7 முதல், 16ம் தேதி வரை, பயிற்சி நடக்கும். இதற்கான விண்ணப்ப வினியோகம், வரும், 20ம் தேதி முதல் துவங்க உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.விபரங்களை, சென்னை பல்கலையின், சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள, மாணவர் ஆலோசனை மையத்தில் தெரிந்து கொள்ளலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. net nta new sylabus full notes available for english contact me.8489243942

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி