CBSE - நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுதியுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2019

CBSE - நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுதியுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு!


நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 12.9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 5) வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம்மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த ஆண்டுமுதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்க 71 நிபுணர்கள் கொண்ட சிறப்பு உதவிக்குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. 1800-118-004 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது counselling.cecbse@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்த உதவிக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள், மேல்நிலைக் கல்வி குறித்த தகவல்கள் எனஅனைத்துவிதமான ஆலோசனைகளும் இதன்மூலம் வழங்கப்படும்.வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில் ஒரு மாதம் முன்னதாகவே பொதுத் தேர்வுமுடிவுகளை சிபிஎஸ்இ வெளியிடு வது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி