ஓய்வுபெற்ற விஏஓக்கள் 1000 பேரை15,000 சம்பளத்தில் நியமிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு - kalviseithi

Jun 20, 2019

ஓய்வுபெற்ற விஏஓக்கள் 1000 பேரை15,000 சம்பளத்தில் நியமிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1,000 பேரை 15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக,  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த 25.2.2019ம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,896 இடங்கள் காலியாக உள்ளன.இந்த காலியிடங்களில் தகுதியும்,  அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக,  மாநிலம் முழுவதும் 1,000 பேரை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மாவட்டங்கள் தோறும் காலியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் ரூ15,000 தொகுப்பூதிய அடிப்படையில் தேவைக்கேற்ப நியமிக்கலாம். இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடர அனுமதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, அந்தந்தமாவட்டங்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற விஏஓ அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை  நியமிக்கும்படியும், அவர்களுக்கு ரூ15 ஆயிரம் ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ்
  கிருஷ்ணகிரி
  CONTACT :9842138560, 9344035171

  ReplyDelete
 3. Trb computer examna maths major eppadi 110 question apply panna mudium best omr sheet

  ReplyDelete
 4. நல்லா வருவிங்க படித்தவர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது ஏற்கனவே பணம் பதவியில் இருந்தவர்களுக்கு பதவி தருவது . இளைஞர்கள் திறனை அவமதிக்கும் வகையில் உள்ளது

  ReplyDelete
 5. Athan pension vanguranga ila.. oc la velai pakka sollunga.. ilaya.. engaluku kudunga..

  ReplyDelete
 6. MLA MP CM PM intha place kudathan retirements annavaingalla podallam ithu thariyathada mutual.........

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி