இன்ஜி. கவுன்சிலிங்கில் 1348 இடங்கள் ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

இன்ஜி. கவுன்சிலிங்கில் 1348 இடங்கள் ஒதுக்கீடு


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மூன்று நாட்களில் 1348 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 25ல் துவங்கியது. நேற்று விளையாட்டு பிரிவில் 330 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மாற்று திறனாளிகளுக்கு 101; ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மூன்று நாட்களில் சிறப்பு பிரிவில் மட்டும் 552 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் முதல் தொழிற்கல்வி கவுன்சிலிங்கும் துவங்கியுள்ளது. முதல் நாளில் 436 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இரண்டாம் நாளான நேற்று 477 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 375 பேர்பங்கேற்றதில் 360 பேர் மட்டும் இடங்களை தேர்வு செய்தனர். இரண்டு நாட்களிலும் தொழிற்கல்வியில் மட்டும்796 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் மூன்று நாட்களில் மொத்தமாக 1348 இடங்கள் நிரம்பியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி