பாட புத்தகங்களில் 19 பிழைகள் நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

பாட புத்தகங்களில் 19 பிழைகள் நீக்கம்


புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் இருந்த பிழைகளை நீக்கி பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய கீதமே தவறாக குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. மேலும் பல வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் பிழையான கருத்து மற்றும் தகவல்கள் காணப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து பள்ளி பாடப் புத்தகத்தில் 19 வகையான பிழைகளை நீக்கி பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதில் ஒன்பது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் அய்யா வழி வைகுண்டசுவாமி தொடர்பான பல பிழையான தகவல்கள் மற்றும் அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து திரும்பிய பின் இந்திய முஸ்லிம் தலைவர்கள் சமூக அறிஞர்கள் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த புரட்சியில் ஈடுபட்டதாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்தது; அதுவும்நீக்கப்பட்டுள்ளது.

'காமராஜரை தேர்தலில் நிற்க வைக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரி கட்டினார்' என ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்த தகவலும் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி உள்ளதாக ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் தவறாக கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளதாக புதிய அம்சத்தைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.சர்வதேச பார்வைகுறைந்தது ஏன்? புதிய பாடத் திட்டத்தைதயாரிக்கும் போது அதை சர்வதேச அளவில் லண்டன் கேம்பிரிட்ஜ் புத்தகத்தின் தரத்துக்கு தயாரிக்கப் போவதாகவும் சி.பி.எஸ்.இ. பாடத்தை மிஞ்சும் வகையில்இருக்கும் என்றும் பள்ளி கல்வித் துறையினர் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால் சர்வதேச விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள்இயற்கை ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் குறித்து குறைந்த அளவிலான தகவல்களே பாடங்களில் இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பாடப் புத்தகத்தை தயாரித்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி. உள்ளூர் அளவில் பிரபலமான விஷயங்களை மட்டும் பாடத் திட்டத்தில் அதிகமாக தந்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு சர்வதேச விஷயங்களை அறியும் வாய்ப்பு குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. அரசாங்கம் பிழை.....புத்தகமுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி