அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு - kalviseithi

Jun 14, 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்குஎதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், உயர்நீதிமன்றம் உத்தரவு 8 வாரத்துக்குள் கட்டணமின்றி இலவச தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

10 comments:

 1. என்ன ஒரு அறிவு

  ReplyDelete
 2. அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவது சட்டத்திற்கு உட்பட்ட செயலா?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 3. அடப்பாவிகளா... அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர்.. டெட் கோச்சிங் சென்டர் வச்சி இருக்கானுங்க..

  அரசு பொறியியல் கல்லூரியில் இருக்கும் பலர் GATE+TRB கோச்சிங் வச்சி இருக்கானுங்க..

  இவனுங்க பண்ற அட்டகாசம் தான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம்..
  இதையெல்லாம் எப்போதோ களை எடுத்து இருக்க வேண்டும்

  ReplyDelete
 4. பள்ளி பணியை பகுதிநேர பணிப்போலவும், ட்யூசனை முழுநேர பணிபோலவும், கிடைக்கும் நேரத்தில் சிலர் மெட்ரிக் பள்ளிகளிலும் சம்பாதிப்பதை தவிர்க்க நல்ல முயற்சி. சம்பளத்தை விட ட்யூசனில் அதிகம் சம்பதிக்கவேண்டும் என்ற மன நிலையை இனியாவது மாற்றிகொள்ளவேண்டும். ஒரு சிலரால் மொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் அவப்பெயர் ஏற்படக்கூடும்.

  ReplyDelete
 5. Please conduct general transfer counselling without hiding the total vacancy now 2018 south district vacancy not displayed lancham vangitu transfer order koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

  ReplyDelete
 6. டியூசன் மற்றும் தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாக இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை ஒன்றியம் வாரியாக கணக்கெடுத்து உடனடியாக அவர்களுக்கு சிட்டிசன் கிளைமாக்ஸ் தண்டனை அளிக்கப்பட வேண்டும்..

  ReplyDelete
 7. அரசு பணியில் இருக்கும் ஒருவர் அப் பணிநேரம் போக மற்ற நேரத்தில் உழைக்க கூடாது என்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது உன் பனி நேரம் போக மற்ற நேரத்தில் சும்மா ஓய்வெடு என்று சொல்வது தான் கேவலம் மேலும் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதும் அதில் பொருள் ஈட்டுவது எப்படி குற்றமாகும் அதை விடுத்து ஒரு ஆசிரியர் பணி நேரம் முடிந்து தையல் , கட்டிட , real estate வேலை களை செய்தால் அது சரியாகுமா? முட்டாள் தனமாக இல்லை இது! நீங்கள் என்ன சொல்ல வேண்டும் நீ எதையாவது செய்து விட்டு போ , ஆனால் பணி நேரத்தை ஒழுங்காக செய் பள்ளி மானர்களுக்கு கற்பிப்பதில் குறை வைக்காதே அதில் குறை வைத்தல் நடவடிக்கை நிச்சயம் என்று அல்லவா கூற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சிறப்பு.! மேற்காணும் பதிவுகளில் இல்லாத, புதிய சிந்தனை..!?

   Delete
  2. இதை வரவேற்கிறேன்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி