அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பு2019-20-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பில் மாணவர்களின் சுய விவரங்களை பதிவுசெய்யும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தஸ்மார்ட் கார்டுகளை அரசு மற்றும்உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 மாணவ, மாணவியருக்கு முதல்வர் பழனிசாமி ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசுமகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 63 லட்சத்து96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 19 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம்திறந்து வைத்தார். மேலும், நபார்டுவங்கி கடன் திட்டத்தில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகை, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ரூ.81 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 51 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல்கழக தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி