வாடகைக்கு ஆசிரியர்கள்!கல்லூரிகளில் புது ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

வாடகைக்கு ஆசிரியர்கள்!கல்லூரிகளில் புது ஏற்பாடு


தேசிய தர மதிப்பீட்டு குழு (நாக்.,) ஆய்வுகளின் போது மட்டும், சில தனியார் கல்லுாரிகள் நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, தகுதியான ஆசிரியர்களை பணிக்கு வைத்து, முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாக்., அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு ஒவ்வொரு கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆராய்ச்சிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக மற்றும் மைதானம் ஆகிய வசதிகளின் வசதிகளின் அடிப்படையில், 'கிரேடு' அந்தஸ்தை வழங்குகிறது. இதற்கென நாக் அமைப்பினர்ஆய்வு நடத்துகின்றனர்.மாணவர் சேர்க்கையின் போது, நாக்., அமைப்பின் மதிப்பீடு, முக்கியத்துவம் பெறுகிறதுகோவையில் செயல்படும் பல்வேறு தனியார் கல்லுாரிகளில், உரிய கல்வித்தகுதியுடன் குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களே, பணியில்உள்ளனர். நாக்., ஆய்வுகளின் போது ஆசிரியர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால், தரநிர்ணய மதிப்பீடு குறைக்கப்படும்.

இதனால், நாக்., கமிட்டி ஆய்வுக்கு வரும் சமயங்களில் மட்டும், தகுதியான ஆசிரியர்களை நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, பிற கல்லுாரிகளில் இருந்து வாடகைக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க மாநிலதலைவர் பசுபதி கூறுகையில், ''நாக்., ஆய்வு தொடர்பாக, பல கல்லுாரிகளில், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நாக்., குழு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் சமர்ப்பிக்கும் கோப்புகளை, பல்கலைகளில் உள்ள கோப்புகளுடன் ஒப்பிட்டு, நேரடி ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.

பாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ''இது சார்ந்த புகார்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கலாம். விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.நாக்., கமிட்டி ஆய்வுக்கு வரும் சமயங்களில் மட்டும், தகுதியான ஆசிரியர்களை நாள் ஒன்றுக்கு, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தருவதாக கூறி, பிற கல்லுாரிகளில் இருந்து வாடகைக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

3 comments:

  1. பல வருடம இந்த வேல நடக்குது இது புதுசு இல்லங்க

    ReplyDelete
  2. அனைத்து தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்கள் சம்பளத்தை அரசிடம் வழங்கி கருவூலம் மூலமாக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்தால் Problem solved ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி