சென்னைப் பல்கலைக்கழகம் தொலைநிலை பட்டப் படிப்பை முழுமை செய்யாதவர்களுக்கான சிறப்புத்திட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

சென்னைப் பல்கலைக்கழகம் தொலைநிலை பட்டப் படிப்பை முழுமை செய்யாதவர்களுக்கான சிறப்புத்திட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனத்தில் பயின்று இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை முழுமையாக முடிக்காதவர்களுக்கான சிறப்புத் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2014-15-ஆம் கல்வி யாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த முதுநிலை மாணவர் களும், 2013-14-ஆம் ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பு களில் சேர்ந்து அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர் களுக்கு மீண்டும் தேர்வெழுத 2019 டிசம்பர் மற்றும் 2020 மே என இரண்டு முறை, முறைப்படுத்தப்பட்ட கட்டணத்துடன் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மேலும் பட்டப் படிப்பு காலத்தை பூர்த்தி செய்து, குறிப் பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களுடைய படிப்புகளை பட்டப் படிப்பிலிருந்து பட்டயப் படிப்பு அல் லது சான்றிதழ் படிப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in அல் லது www.unom.ac.in இணைதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி