புதிய கல்வி கொள்கை - மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2019

புதிய கல்வி கொள்கை - மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு


புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கக்கூடிய புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிப்பதற்காக வரும் 22 ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அரசு வலைதளங்களில் வெளியிடப்பட்டு இந்த மாதம் இறுதிவரை பொதுமக்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் தான் டெல்லியில் 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் புதிய வரைவில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரவேண்டுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். தங்களது தரப்பு கருத்துகளையும் மாநில அமைச்சர்கள் முன் வைப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சொல்லப்படக்கூடிய கருத்துக்கள் ஏற்புடையவையாக இருந்தால் புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இறுதி வடிவம் பெறும்.

மும்மொழிக்கொள்கை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை தமிழக அரசு சரியாக பயன்படுத்தி கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

4 comments:

  1. ஆங்கிலவழி கல்வி பயிற்றுவிக்கும்
    அரசு பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை குறைக்கலாம்.

    ReplyDelete
  2. இதற்கு தெர்மாகோல் விஞ்ஞானியை அனுப்பலாம்

    ReplyDelete
  3. Students and Teachers ratio Should be calculate separately for Tamil and English medium.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி