எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - kalviseithi

Jun 7, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக படிக்க முடியும். நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இன்று (ஜூன் 7) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் 20-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 3,500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் கிடைத்துள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி