மாநில மொழிகளில் வங்கித் தேர்வு நடக்குமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

மாநில மொழிகளில் வங்கித் தேர்வு நடக்குமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்


வங்கித் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பிற தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற தென்மாநில எம்.பி.க்களின் கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஜி.சி.சந்திரசேகர் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர், “வங்கித் தேர்வுகளையும் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான பிற தேர்வுகளையும் ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் கன்னடத்திலும் நடத்தவேண்டும்” என்றார். ஜி.சி.சந்திரசேகர் இதனை கன்னட மொழியில் கூறினார்.

இதனை மொழிபெயர்க்கும் வசதி இல்லாததால், அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, மொழிபெயர்த்து தெரிவித்தார். அப்போது வெங்கய்ய நாயுடு கூறும்போது, “உறுப்பினர்கள் அவையில் தங்கள் சொந்த மொழி யிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றிலோ பேச விரும்பினால் அதுபற்றி முன் கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவேண்டும். அப்போதுதான் மொழி பெயர்ப்பு வசதி செய்ய முடியும்” என்றார்.

இதையடுத்து சந்திரசேகரின் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும்போது, “அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்புடைய இந்த விவகாரம் குறித்து மக்களவை எம்.பி.க்களும் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இது மிகவும் முக்கிய மான பிரச்சினை. இதனை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். உறுப்பினர்களின் கோரிக்கையை ஆராய்வேன். முடிவை அவையில்தெரிவிப்பேன்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி