கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு - kalviseithi

Jun 17, 2019

கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு


கோடை விடுமுறை முடிந்து, கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்று(ஜூன் 17)திறக்கப்படுகின்றன. சீனியர் மாணவர்களை, ஜூனியர்கள் வரவேற்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல் மீண்டும் வகுப்புகள் துவங்கின. பிளஸ் 2 முடித்தமாணவர்களுக்கு, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான, கவுன்சிலிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறையும், நேற்றுடன் முடிந்துள்ளது.

ஒன்றரை மாதத்துக்கு பின், மீண்டும், புதிய கல்வி ஆண்டில், கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்று திறக்கப்படுகின்றன.'புதிய கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்து, புதிய மாணவ, மாணவியர், கல்லுாரி படிப்புகளில் சேர்ந்திருப்பர். 'அவர்களை, சீனியர் மாணவர்கள், 'ராகிங்' செய்வது, கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்' என, பல்கலைமானிய குழு சார்பில், கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுாரிகளிலும், ராகிங் மற்றும் சீனியர், ஜூனியர் பிரச்னைகளை தடுக்க, சீனியர் மாணவர்கள் வழியாக, ஜூனியர்களைவரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் கல்லுாரிகளில், சீனியர் மாணவியர், ஜூனியர்களுக்கு பூக்கள் கொடுத்து, வகுப்பறைக்கு அழைத்து செல்ல, முடிவு செய்துள்ளனர். புதிய மாணவர்களுக்கு, இன்று முதல், ஒரு வாரத்துக்கு, 'ஓரியன்டேஷன்' எனப்படும், புரிந்துணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி