தண்ணீர் தட்டுப்பாட்டால் அண்ணா பல்கலை தவிப்பு: வகுப்புகள் துவங்குவது தாமதமாகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

தண்ணீர் தட்டுப்பாட்டால் அண்ணா பல்கலை தவிப்பு: வகுப்புகள் துவங்குவது தாமதமாகும்?


தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள் திறப்பு தேதி, தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தண்ணீரின்றி, வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, கல்லுாரிகளுக்கு விடுமுறை என்பதால், கல்லுாரி வளாகங்கள், விடுதிகளில் மாணவர்கள் இல்லை.

இதனால், தண்ணீர் பிரச்னையால் பாதிப்பு எதுவும் இல்லை.அதேநேரம், ஜூலை, 1 முதல் அனைத்துஇன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, கட்டடவியல் கல்லுாரி ஆகியவற்றிலும், குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரியிலும், ஜூலை, 1ல் வகுப்புகளை துவங்க, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால், தற்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால், விடுதிகளுக்கு வரும் மாணவர்கள் குளிக்கவும், கழிவறை செல்லவும் போதிய நீர் வழங்க முடியுமா என, அண்ணா பல்கலை நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.அதேபோல், விடுதி மாணவர்களுக்கு, கேன்டீனில் உணவு சமைக்கவும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால், கல்லுாரி திறப்பை தள்ளி வைக்கலாமா என, பல்கலை நிர்வாகம் ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.தினமும் ரூ.50 ஆயிரம்செலவுஅண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள் மற்றும் பல்கலை பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு, தினமும், 50 லாரிகளுக்கு மேல், தனியாரிடம் தண்ணீர்வாங்கப்படும். தற்போது, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு மட்டும், 20 லாரிகளுக்கு மேல் தண்ணீர் வாங்கப்படுகிறது.

இதற்காக, அண்ணா பல்கலை தினமும், 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்கிறது.கல்லுாரிகளை திறந்தால், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.இதனால், கல்லுாரி நிதி அதிகமாக செலவாகும் என்பதால், சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதே நேரம், பல்கலை வளாகம் மற்றும் விடுதி வளாகத்தில், நிலத்தடி நீர் ஓரளவு உள்ள நிலையில், ஆழ்துளை கிணறு அமைக்காமல், பல்கலை நிர்வாகம், தனியாரிடம் தண்ணீரைவிலைக்கு வாங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி