பாட புத்தகத்தில் இடம்பெற்ற ரஜினி.. நீக்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2019

பாட புத்தகத்தில் இடம்பெற்ற ரஜினி.. நீக்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!


தமிழகத்தில் இந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் சாலையில் இருந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனின் கதை இடம்பெற்றுள்ளது.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.மேலும் நடிகர் ரஜினி குறித்தும் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு ரஜினி என்ன சாதனை செய்துவிட்டார் என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியவை, பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும். உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.தண்ணீர்ப் பிரச்சினையால் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. அப்படி வரும் செய்திகள் வதந்திகள் மட்டுமே என்று கூறினார். பள்ளிகளின் தண்ணீர் பிரச்சினை இருந்தால் உடனடியாக சரிசெய்யப்படும்.

2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரி செய்யது தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Avanala than naraya per cigarette adika palagirukanganga best example my siththappa

    ReplyDelete
  2. தமிழ் நாட்டில் தலைவர்கள் இருந்தது பாடநூல் தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை போலும்.சினிமா நடிகர் தான் தெரியும் போல.அடுத்து யார் பாடத்த சேர்க்க போறாங்களோ.

    ReplyDelete
  3. Nadhuram godseay varalaraiyum poduvanuga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி