நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2019

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்,  14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.


இன்று வெளியீடு:

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை (ஜூன் 5) வெளியிடுகிறது. இந்த முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா,  இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. பயோமெட்ரிக் வருகைப்பதிவை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்தினால் அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் செயலாக இருக்கும். ஏனென்றால் வேறு வழியின்றி முழு நேரமாகப் பணியாற்றி 7700 - ஐ மிகப் பெரிய ஊதியமாக பெற்று வயிற்றெரிச்சலோடு எட்டாவது ஆண்டாக உணவிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் அனைத்து வேலைகளையும் அவசரம் அவசரம் என்று கேட்டு வாங்கும்போது(கணிப்பொறியில் அனைத்து பதிவுகளும்) மூன்று அரை நாட்கள் என்பதற்குப் பதிலாக மனசாட்சியில்லாமல் வேலை பார்க்கின்றோம் என்பது தெரிந்தும் அரசு அதிகாரிகள் எங்களை கண்டுகொள்ளாமல் வேலையை மட்டும் வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். எங்களின் வேதனையை யாரிடம்தான் கொண்டு செல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசாங்கம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு,முழு நேர பணியமர்த்தி Rs.15,000/- வழங்கலாம் ....

      Delete
  2. கஷ்டப்பட்டு படித்து படித்து 2013-ல பாஸ் பண்ணி 2017 ல பாஸ் பண்ணி இப்போ 2019 ல பாஸ் பண்ணி வாழ்க்கையை மாற்ற போகிறதா? இந்த தேர்வு? இப்படியே ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? இதில் வேறு வேலை பார்த்துக்கொண்டு திருமணமாகி குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருப்பவர்களும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு ஒரு புறம் அனுப்பிவிட்டு (அரசு சார்பில்) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யப் போகிறோம்?

    ReplyDelete
    Replies
    1. We people are writing this Tet exam from 2013 till death.passed in all years.... But no use😅😭

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி